துபாய்-கப்பலிலிருந்து விழுந்து இந்திய மாலுமி சாவு
துபாய்: ஹம்ரியா துறைமுகத்தில் கப்பலில் பணியாற்றி வந்த இந்தியாவைச் சேர்ந்த மாலுமி ஜார்ஜ் என்பவர், கப்பலிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்த ஜார்ஜுக்கு வயது 52. ஒரு சரக்குப் பெட்டியின் மீது பிளாஸ்டிக் பேப்பரை ஒட்டும் பணியில் ஜார்ஜும், இன்னொரு மாலுமியும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜார்ஜ் தவறி கடலில் விழுந்து விட்டார். இன்னொரு மாலுமி, பார்சலுக்கு அந்தப் பக்கம் இருந்ததால் ஜார்ஜ் விழுந்தது அவருக்குத் தெரியவில்லை. சத்தமே இல்லாததால், ஜார்ஜ் பெயரைச்சொல்லி அவர் கூப்பிட்டபடி அந்தப் பக்கம் வந்தபோதுதான் ஜார்ஜ் கடலில் விழுந்தது தெரிய வந்தது.
அவரது ஷூக்கள், கடலில் மிதந்து கொண்டிருந்தன. இதையடுத்து ஹம்ரியா துறைமுக மீட்புப் படை போலீஸாரை அவர் அழைத்தார். பின்னர் விரைந்து வந்த போலீஸார் ஜார்ஜின் உடலை மீட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications