22ம் தேதி லோக்சபாவில் மன்மோகன் அரசு பலப்பரீட்சை
டெல்லி: நம்பிக்கை வாக்கு கோருவதற்காக வரும் 21ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது. 22ம் தேதி நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்ட நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்தார்.
அப்போது, லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் பிரதமர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. இதில் நம்பிக்கை வாக்கு கோருவதற்காக எப்போது லோக்சபாவை கூட்டுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 21ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் 21ம் தேதி கூட்டப்படுகிறது. அன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்கிறார். அதன் மீது விவாதம் நடைபெறும். பின்னர் 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள் வெளிநாட்டுப் பயணம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை பிரதமரின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாலையில் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications