ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கால் ரூ. 16 கோடி இழப்பு

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மீன் உணவு மையங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இங்கு கடந்த 8 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களைக் கண்டித்தும், தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன் பிடி தொழில் சம்பந்தப்பட்ட அனைவருமே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று போராட்டத்தின் 9வது நாளாகும்.
ராமேஸ்வரம் மீனவர்கள் தினசரி கடலுக்குச் சென்று வஞ்சிரம், இறால், வவ்வால், நண்டு உள்ளிட்ட 1000 டன் மீன்களைப் பிடித்து வருவது வழக்கம்.
உள்ளூர் தேவைகளுக்குப் போக மற்ற மீன்கள், கொச்சி, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பெரிய சைஸ் இறால், வஞ்சிரம், நண்டு உள்ளிட்டவைதான் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
ஆனால் ஸ்டிரைக்கால் மீன் பிடி தொழில் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் 20 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள், ஏஜென்டுகள், படகு உரிமையாளர்கள், படகு பழுது பார்ப்போர், ஐஸ் தயாரிப்பு நிறுவனங்கள் என பல தரப்பட்டவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3000 மீனவர்கள் வேலையில்லாமல் வாடிக் கொண்டுள்ளனர். 850க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்ட மீனவர்கள் இருவரை நேற்று இலங்கை கடற்படையினர் கொன்றுள்ளதால், நாகை மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது. இதனால் மீனவர் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications