நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு நிச்சயம் வெல்லும்: அமர்சிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில், சமாஜ்வாடி கட்சியின் துணையுடன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
பிலிம்பேர் விருது விழாவுக்காக அமர்சிங் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டு நலனைக் கருத்தில் கொண்டுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெறும்.
அத்வானி போன்ற மூத்த தலைவர்கள், நாட்டு நலனைக் கருத்தில் கொள்ளாமல் அணு சக்தி ஒப்பந்த்தை எதிர்த்து வருவது நல்லதல்ல என்றார் அமர்சிங்.












Click it and Unblock the Notifications