பாக் ஓபாமாவுடன் வைகோ சிகாகோவில் சந்திப்பு
சிகாகோ: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான பாரக் ஓபாமாவை சிகாகோவில் சந்தித்துப் பேசினார்.
சிகாகோ சென்றிருந்த வைகோ, அங்கு நடந்த பாரக் ஓபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது ஓபாமாவை சந்தித்து, மகாத்மா காந்தி அவதரித்த இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக தன்னைவைகோ அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதையடுத்து அவருடன் ஆர்வமாக பேசியுள்ளார் ஓபாமா. அப்போது, எஸ், வி கேன் என்ற தலைப்பில் தான் எழுதிய ஆங்கில நூலை ஓபாமாவிடம் காட்டினார் வைகோ. இது ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூலாகும்.
அந்த நூலில் டூ வைகோ, எஸ், வி கேன் என்று எழுதி கையெழுத்திட்டார் ஓபாமா.
பின்னர் அந்த நூல்குறித்து வைகோவிடம் ஆர்வத்துடன் வினவினார். அதுகுறித்து வைகோ ஓபாமாவிடம் விளக்கினார். ஒரு மாணவராக, ஒரு சமுதாய ஒருங்கிணைப்பாளராக, ஒரு எம்.பியாக பாரக் ஓபாமா செயல்பட்ட விதம், சந்தித்த சவால்கள், போராடிய போராட்டங்கள் குறித்து இந்த நூலில் விளக்கியிருப்பதாக வைகோ கூறவும், அதைக்கேட்டு வியந்துள்ளார் ஓபாமா.
பின்னர் ஓபாமாவிடம் வைகோ கூறுகையில், நீங்கள் அமெரிக்க அதிபர் நாற்காலியில் உட்காரும்போது, ஹாரியட் பீச்சர்ஸ்டவ், மேடம் ரோசா பார்க்ஸ், ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் கண்ட கனவுகள் நனவாகும்.
உலகம் முழுவதும் பெரும் மாற்றத்ைத உங்களது தேர்வு கொண்டு வரும். உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் உங்களது தேர்வால் மகிழ்ச்சி அடைவர். அவர்களுக்கு புதிய விடியல் உதயமாகும்.
உங்களது அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் பெரும் வெற்றி பெற இயற்கை அன்னையை வணங்கி வேண்டுகிறேன் என்றார் வைகோ.
ஓபாமாவை சந்தித்த முதல் தமிழக அரசியல் தலைவர் வைகோதான் என மதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications