கருணாநிதி மகள் செல்வி திடீர் சுகவீனம்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி, அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி. மறைந்த முரசொலி மாறனின் தம்பி முரசொலி செல்வத்தை மணந்துள்ளார். பெங்களூரில் வசித்து வருகிறார்.
கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பூசலைப் போக்க கடுமையாக முயன்று வருகிறார். ஆனால் மு.க.அழகிரியின் கடும் எதிர்ப்பு காரணமாக இதுவரை அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தனது தாயார் தயாளு அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து அவரைப் பார்க்க சென்னைக்கு வந்துள்ளார்.
நேற்று பிற்பகலில் அவர் உடல் நலம் பாதித்த நிலையில் செயின்ட் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவரது உடல் நல பாதிப்புக்கு என்ன காரணம் என்று மருத்துவமனை வட்டாரத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால்அவர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டதால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
--
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications