தேர்தலுக்கு பாஜக தயார்-அருண் ஜேட்லி
விருந்தாவன்: கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் பிரச்சனைத் தீர்த்துக் கொள்ளும் கெளண்டராக (counter) பிரதமர் அலுவலகம் மாறி்ப் போய்விட்டது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல எம்பிக்களை விலைக்கு வாங்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறுகையில்,
மாண்புமிகு பிரதமர் அலுவலகம் இரு தொழில் நிறுவனங்களின் சண்டையில் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது துரதிஷ்டவசமானது.
லோக்சபா தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இல்லை. நான்காண்டுகால மட்டமான ஆட்சியால் மக்களை சந்திக்க அந்தக் கட்சிக்கு பயம்.
இதனால் தான் சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை விலைக்கு வாங்கியாவது நம்பிக்கை தீர்மானத்தில் வெல்ல காங்கிரஸ முயல்கிறது. இதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து நடந்து கொள்ள அந்தக் கட்சி தயாராகிவிட்டது. அதற்கு ஒரு உதாரணம் தான், கார்பரேட் சண்டையில் பிரதமர் தலையிட்டதும், சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்த்ததும்.
நவம்பரில் தேர்தல் வந்தாலும் அடுத்த ஆண்டு மார்ச்சில் தேர்தல் வந்தாலும் சந்திக்க பாஜக ரெடி, எப்போது தேர்தல் வந்தாலும் பாஜக வெல்லும். அரசியல், எண்ணிக்கை, கூட்டணி நிலைமை அப்படியிருக்கிறது.
நாட்டின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமான அமர்நாத் கோவிலுக்கு தரப்பட்ட நிலத்தை சில தேச விரோத சக்திகளின் நெருக்கதலால் திரும்பப் பெற்றது, ராமர் பாலத்தை உடைக்க முயன்றது ஆகியவை மக்களை மிகவும் புண்படுத்திவிட்டது.
மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க காங்கிரசிடம் எதுவுமே இல்லை. விலைவாசி உயர்வை மறக்கவோ மன்னிக்கவோ மக்கள் தயாராக இல்லை.
நாட்டை பாஜகவாலும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானியாலும் மட்டுமே காப்பாற்ற முடியும்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் லோக்சபா வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக சில வாரங்களில் வெளியிடும். மொத்தமுள்ள 80 இடங்களில் பெரும்பாலானவற்றில் பாஜகவே போட்டியிடும் என்றார் ஜேட்லி.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications