அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கம்-எதிராக சதி?
சென்னை: அரசு கேபிள் டிவி முதல் கட்டமாக தஞ்சை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் செயல்படத் தொடங்கிவிட்டது. இன்று காலை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் முதல்வர் கருணாநிதி, இந்த 4 மாவட்டங்களுக்குமான கேபிள் கட்டுப்பாட்டு மையத்தைத் துவங்கி வைத்தார்.
ஆனால் இந்தத் தகவல் பொதுமக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர்வதைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் சிலர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்புகளை வழங்க அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. இந்த கார்ப்பரேஷன் சார்பில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு பக்கத்து மாவட்டங்களுக்கு சிக்னல்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.
தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய நான்கு மாவட்ட தலைநகரங்களில் இன்று முதல் கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கப் படும். படிப்படியாக கோவை, நெல்லை, வேலூரில் ஒளிபரப்பு தொடங்கப்படுவதுடன் சென்னை யில் செப்டம்பர் 15-ந் தேதி அரசு கேபிள் டிவி இயங்கும்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் முதல் சேவையை முதலமைச்சர் கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று துவக்கி வைத்தார்.
தஞ்சாவூரிலும் அதே நேரத்தில் இந்த துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் சவுண்டையா, தஞ்சை கலெக்டர் விஜய ராஜ்குமார், திருவாரூர் கலெக்டர் சந்திரசேகர், நாகை கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு கேபிள் டிவி துவங்கப் பட்டதாக வெளியே தகவல் தெரிந்ததும் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தடுக்க சதி?:
சுமார் 60 சேனல்கள் அரசு கேபிள் டிவி மூலம், ரூ.100 செலவில் மக்கள் பார்க்கலாம் என்று கூறப்பட்டதையொட்டி, நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் அரசு கேபிள் டிவியை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த கேபிள் டிவி துவக்கத்தை முறைப்படி மக்களுக்கு அறிவிக்காமலும், முடிந்த வரை இந்த சானல்கள் தெரிவதைத் தடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக சில கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு சன் டிவியின் சேனல்களுக்கான டிகோடிங் அளிக்கப்படவில்லை என்ற தகவலும் பரவியுள்ளது. இதனால் தாங்கள் விரும்பிய சேனலைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.
திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலி செய்தியாளர் உட்பட யாருக்குமே விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இதனால் செய்தியாளர்களால் இதுகுறித்த செய்திகளை முழுமையாகச் சேகரிக்க முடியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications