கும்பகோணம் பயங்கரம்-நாளை 4ம் ஆண்டு
கும்பகோணம்: கும்பகோணத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானதன் 4ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி பலியாயினர்.
இந்தக் குழந்தைகளின் நினைவாக ரூ. 60 லட்சம் செலவில் பழைய பாலக்கரை பகுதியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இப்போது முடிவுபெறும் நிலையில் உள்ளன.
இந்த மண்டபத்தில் ரூ. 29.5 லட்சம் செலவில் வெண்கலத்தில் நினைவு தூண் கட்டப்பட்டது. 4 பகுதிகள் கொண்ட இந்தத் தூணை பொருத்துவதற்காக நினைவு மண்டபத்தில் 4 பாகங்களாக கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டன.
ஆனால், வெண்கல நினைவு தூணை நேற்று மண்டபத்தில் பொருத்தி பார்த்தபோது அதற்கும் கான்கிரீட் தூணுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. இந்தப் பணியை செய்த காண்ட்ராக்டரின் அலட்சிமே இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
கான்கிரீட் தூண்களை இடித்து அப்புறப்படுத்தினால்தான் வெண்கல தூணை நிறுவ முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், தூண்களை அதிகாரிகள் இடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அந்தத் தூண்கள் இடிக்கப்பட்டன.
நாளை குழந்தைகள் பலியானதன் 4ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படும் நிலையில் இந்தத் தூண்கள் இடிக்கப்பட்டுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications