கெளடாவுடன் சோனியா தூதர் சந்திப்பு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவதற்காக மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கோரி அக் கட்சியின் தலைவர் தேவே கெளடாவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தூதர் அகமத் படேல் பேச்சு நடத்தினார்.
டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. கெளடாவிடம் 3 எம்.பிக்கள் உள்ளனர். இதில் கேரளத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்பியான வீரேந்திரகுமார் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். அவர் கெளடாவின் பேச்சை எப்போதுமே கேட்டதில்லை.
இதனால் மிச்சமிருப்பது 2 எம்பிக்களே. இதில் ஒருவர் கெளடா. இன்னொருவர் சிவண்ணா. நம்பிக்கை வாக்கில் வெல்ல ஒவ்வொரு எம்பியும் முக்கியம் என்பதால் எந்த சிறிய கட்சியையும் விடாமல் காங்கிரஸ் ஆதரவு கேட்டு வருகிறது.
இந்த வகையில் 2 எம்பிக்கள் கொண்ட கெளடாவிடம் ஆதரவு கோரியுள்ளது. ஆனால், அவர் கர்நாடக பாஜக விஐபிக்களான பெல்லாரியைச் சேர்ந்த சுரங்க அதிபர்களான ரெட்டி சகோதரர்களை ஒடுக்க காங்கிரஸ் முன் வந்தால் ஆதரவு தருவதாக நிபந்தனை போட்டார்.
பெல்லாரி சுரங்கங்களை நாட்டுடமையாக்கினால் ஆதரவளிப்பதாக கெளடா கூறி வருகிறார்.
இந் நிலையில் சோனியா காந்தியின் அரசியல் தூதரான அகமத் படேல் தேவே கெளடாவை அரை மணி நேரம் சந்தித்து சமசர பேச்சு நடத்தினார். ஆனால், அப்போதும் கெளடா ஏதும் பிடி கொடுத்து பேசவில்லை என்று தெரிகிறது.
தனது முடிவை 18ம் தேதி அறிவிப்பதாக கெளடா கூறிவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications