அதிமுக மாஜி எம்எல்ஏ உறவினர் கைது-சிபிஐ அதிரடி
நெல்லை: விற்பனை வரி மோசடி செய்த அதிமுக மாஜி எம்எல்ஏவின் உறவினர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கோவில்பட்டி அதிமுக மாஜி பெண் எம்.எல்.ஏ சியாமளாவின் உறவினரான இவர் அங்குள்ள ஒரு தீப்பெட்டி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
தீப்பெட்டிக்குரிய விற்பனை வரி லேபிள் ஒட்டாமல் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக இவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு சிபிஐ கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதற்கிடையில் பாலகிருஷ்ணன் நெல்லையை அடுத்த தேவர் குளத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று நெல்லை வந்த சிபிஐ படையினர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் உதவியுடன் தேவர்குளம் சென்றனர்.
பின்னர் அங்கு உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பாலகிருஷ்ணனை கைது செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications