சிறையில் குருவை பார்க்க பாமகவினருக்கு தடை
அரியலூர்: வன்னியர் சங்க மாநில தலைவர் காடு வெட்டி குருவை பார்க்க பாமக கட்சியினர் மற்றும் உறவினர்களுக்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
வன்னியர் சங்க மாநில தலைவர் காடு வெட்டி குரு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி தமிழக அரசு அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் குருவை, அவரது வழக்கறிஞர்கள் தவிர உறவினர்களோ, கட்சிக்காரர்களோ பார்க்க சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து தனது மனைவி உள்ளிட்ட 8 உறவினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் தன்னைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என குரு சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அந்த பட்டியலில் பார்க்க வேண்டியவர்களின் முழு முகவரி இல்லை என்பதால் அதை சிறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. எனவே முழு முகவரியுடன் பட்டியில் கொடுத்தால் மட்டுமே அவர்களால் குருவை சந்திக்க இயலும்.
இந்தப் பட்டியலை அரியலூர் போலீசாருக்கு அனுப்பி அவர்கள், அதனை பரிசீலனை செய்து, பார்க்க அனுமதிக்கலாம் என்று கூறிய பின்னர்தானன் அவர்கள் குருவை சந்திக்க அனுமதி வழங்கப்படும். இருப்பினும் இந்த அனுமதி கிடைக்க கால அவகாசம் எதுவும் இல்லையாம்.
அனுமதி கிடைத்தாலும் பட்டியலில் உள்ளவர்கள் மாதம் இரு முறை மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை அவரது வக்கீல் மட்டுமே குருவைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications