பாக். எல்லைக்குள் அமெரிக்கா தாக்குதல்-11 வீரர்கள் பலி

பாகிஸ்தானுக்குள் உள்ள பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது.
வசிரிஸ்தான் பகுதி, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. தலிபான்கள் மற்றும் அல் கொய்தா அமைப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட முடியாமல் பாகிஸ்தான் படைகள் திணறிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் இன்று விமானத் தாக்குதலை நடத்தின. மொத்தம் 12 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் புஷ் கூறுகையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் சில தீவிரவாதிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டுள்ளனர். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. ஆப்கானிஸ்தானுக்கும் நல்லதல்ல. நாளை பாகிஸ்தானுக்கும் இது இடையூறாக அமையும் என்றார் புஷ்.
அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலால் பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சரியானதே, நியாயமானதே என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விட்டதாக நேற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஓபாமா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications