கொறடா உத்தரவு மீறல்: எல்.ஜி, செஞ்சியாரை நீக்க மதிமுக கோரிக்கை
டெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற மதிமுக கொறடா உத்தரவை மீறும் வகையில் பேட்டி அளித்துள்ள எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களிக்க வேண்டும் என மதிமுக எம்.பிக்களுக்கு கட்சி கொறடா கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் தாங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அறிவித்துள்ளனர்.
இது கட்சி கொறடாவின் உத்தரவை மீறும் செயல். ஒருஎம்.பியோ அல்லது எம்.எல்.ஏவோ, அந்தக் கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட முடியாது. அப்படி மீறினால் அவர்களது உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும்.
எனவே எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சி கொறடாவின் உத்தரவை மீறும் வகையில் பேசியுள்ளதால் இருவரையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். அவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு கோரிக்ைக விடுத்து கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.
மதிமுகவிலிருந்து செஞ்சியாரும், எல்.கணேசனும் நீக்கப்பட்டுள்ளனர். வைகோ தலைமையிலான மதிமுகதான் உண்மையான மதிமுக என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் வழியில் நாங்கள் இருவரும் வாக்களிப்போம் என சமீபத்தில் எல்.கணேசன் தெரிவத்திருந்தார்.
இதையடுத்து இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications