ஜம்முவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - 42 பேர் காயம்
ஜம்மு: ஜம்முவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் துணை கமான்டன்ட் உள்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் ராம்பன் மாவட்டம் பனிஹாஸ் டவுன் பகுதியில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் தொழுகைக்காக அங்குள்ள ஜாமியா மசூதியில் முஸ்லீம்கள் கூடியிருந்தனர். அப்போது 1.05 மணியளவில் தீவிரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரிசர்வ் போலீஸ் துணை கமான்டன்ட் உள்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
உடனே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ராம்பன் மாவட்ட டிஎஸ்பி தலீப் கூறுகையில், காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்வாசிகள்தான். அமர்நாத் யாத்ரீகர்கள் இதில் காயமடையவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் யாத்திரை பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
--
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications