நம்பிக்கை வாக்கெடுப்பு: எதிர்த்து வாக்களிக்க அஜீத் சிங் கட்சி முடிவு
{image-Ajit Singh250_20072008.jpg tamil.oneindia.com}டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களிக்க 3 எம்.பிக்களை வைத்துள்ள ராஷ்டிரிய லோக்தளம் கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அஜீத் சிங், சிபு சோரன், தேவே கெளடா ஆகியோரின் (மொத்தமாக சேர்த்து 11 எம்.பிக்கள் உள்ளனர்) கட்சிகளை காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பியுள்ளது. இதில் சிபு சோரன் அரசை ஆதரிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. கெளடா இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அஜீத் சிங் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளார். இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அஜீத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கட்சி எம்.பிக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசிய பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டது.
கட்சியினரின் கருத்தும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
அஜீத் சிங்கை சமீபத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அஜீத்சிங், அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது, ஐக்கிய முற்போக்குக்கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications