சமாஜவாதியின் தொடரும் துரோகம்:சிபிஎம்
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோற்றால், அணு ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. முயன்றால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு பிரகாஷ்கரத் கூறியதாவது:
மத்திய அரசும், அணுசக்தி ஒப்பந்தமும் 22ம் தேதி தண்டனைக்குள்ளாவது உறுதி. நம்பிகை வாக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சர்வதேச அணுசக்தி கழகத்துடன் மேற்கொண்டு பேசுவோம் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால் தற்போது வியன்னாவில் இந்திய அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இது பச்சை துரோகம். ஏற்கனவே நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இப்போது பகிரங்கமாக அளித்த வாக்குறுதியை காப்பாற்ற மறுக்கிறார்கள்.
புஷ்ஷூக்கு விசுவாசமாக நடந்து கொள்வது மட்டுமே அவர்களது நோக்கம். தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிக்களை அதிகாரத்தையும், பணத்தையும் கொண்டு விலைக்கு வாங்குவதில் காங்கிரஸூம் சமாஜவாதியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட கிரிமினல்களை கூட (எம்பிக்கள்) அவர்கள்
விட்டுவைக்கவில்லை. இது வெட்ககேடு.
சமாஜவாதியின் தொடரும் துரோகம்:
சமாஜவாதி கட்சி நாட்டுமக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. அணு ஒப்பந்தத்திலும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதிலும் அக்கட்சி 3வது முறையாக துரோகம் செய்துள்ளது.
சமாஜவாதி, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1999ம் ஆண்டு பாஜவை எதிர்த்து மதசார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டபோது, சமாஜவாதி மட்டும் பாஜவை ஆதரித்து அக்கட்சி தலைமையிலான அரசு அமைய காரணமாக இருந்தது.
பின்னர் 2002ல் கே.ஆர்.நாராயணனை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட சமாஜவாதி சம்மதித்தது. ஆனால் கடைசி நேரத்தில் பாஜவுடன் சேர்ந்து கொண்டு அப்துல் கலாமை ஆதரித்தது.
இப்போது அணு ஒப்பந்த விவகாரத்தில் 3வது முறையாக துரோகம் செய்துள்ளது. ஒப்பந்தத்தை எதிர்க்கும்படி சமாஜவாதியை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. அவர்களாகவே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒப்பந்தத்தை எதிர்த்து பிரசாரம் செய்தனர். அவை நாடாளுமன்ற குறிப்புகளில் கூட உள்ளன.
இப்போது திடீரென்று காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு அமெரிக்காவையும், அணு ஒப்பந்தத்தையும் ஆதரிக்கின்றன.
ஒருகாலத்தில் உத்தரபிரதேசத்தில் மதசார்பற்ற அணியை வழிநடத்திய சமாஜவாதி கட்சி, தற்போது தனக்குரிய அரசியல் இடத்தை இழந்துவிட்டது.
அமெரிக்காவை எதிர்த்து பேசுவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு அக்கட்சி துரோகம் செய்து வருகிறது. அதற்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று காரசாரமாக அக்கட்சியை குற்றம் சாட்டினார் காரத்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications