'டை' ஆனால் சோம்நாத் சாட்டர்ஜி ஓட்டு!
டெல்லி: சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சிபிஎம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை புறம் தள்ளிவிட்டு இன்று அவையை நடத்தினார் சாட்டர்ஜி.
முன்னதாக அவரை பதவி விலகச் சொல்லும் கடிதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஒருவர் சோம்நாத்திடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடதுசாரிகளின் முடிவுக்கேற்ப செயல்பட சோம்நாத் சாட்டர்ஜி மறுத்து வருவதால் உடனடியாக சபாநாயகர் பதவியைஅவர் ராஜினாமா செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை சோம்நாத் ஏற்கவில்லை.
இந் நிலையில், சோம்நாத் சாட்டர்ஜிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தி, கட்சிக்கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடக்கக் கூடாது. கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என கட்சியின் மத்திய குழு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
'டை' ஆனால் சோம்நாத் ஓட்டு'!:
இந் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம நிலை ஏற்பட்டால் அரசுக்கு ஆதரவாக தனது வாக்கை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி செலுத்துவார் என முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்க்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாநாயகர் பொறுப்புக்குரிய கெளரவத்தை காத்துள்ளார் சோம்நாத் சாட்டர்ஜி. சபாநாயகர் என்பவர் எந்தக் கட்சிக்கும் உரியவர் அல்ல. அவர் பொதுவானவர். எனவே தனது பதவியை சோம்நாத் ராஜினாமா செய்யாதது சரியான முடிவு.
வழக்கமாக அரசை காக்கத்தான் சபாநாயகராக இருப்பவர் வாக்களிப்பார். இதுதான் சர்வதேச அளவில் நிலவி வரும் மரபு. இருப்பினும் இதை சபாநாயகர் மீது கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. இருப்பினும் சம நிலை ஏற்பட்டால் அரசுக்கு ஆதரவாகவே சோம்நாத் வாக்களிப்பார் என்றார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற சங்க்மாவின் மகள் அகதா சங்க்மா இன்று எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications