புலிகளின் முக்கிய தளம் பிடிபட்டது: இலங்கை ராணுவம்
கொழும்பு: மன்னார்அருகே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தீவை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது. பலர் உயிரிழந்து வருகின்றனர். புலிகள் வசம் இருந்த பகுதிகளை மீட்டு வருவதாக ராணுவம் அவ்வப்போது தெரிவித்து வருகிறது.
சமீபத்தில் மன்னார் பகுதியில்உள்ள, விடுதலைப் புலிகள் வசம் பல வருடங்களாக இருந்து வந்த விடத்தல் தீவு என்கிற முக்கிய கடற்படைத் தளத்தை மீட்டதாக ராணுவம் அறிவித்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக் கடவு நகரத்தை மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நகரம் கடந்த 21 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விடத்தல் தீவு அருகில்தான் இந்த இலுப்பை கடவு உள்ளது. இந்த தளம் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications