திமுக உண்ணாவிரதம்: நிரந்தர தீர்வுக்கான முதல்படி - ஸ்டாலின்
மதுரை: திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டம், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதல் படி என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு 2 தமிழக மீனவர்கள் பரிதாபமாக பலியானார்கள். இலங்கை கடற்படையை கண்டித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
வெற்றிகரமான இந்த போராட்டம், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதல்படியாகும். தமிழக மீனவர்கள் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஜெயசிங்கேவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்ததாக அறிந்தேன்.
கச்சத்தீவை திரும்ப பெறுவதிலும், மீனவர் நலன் காப்பதிலும் மேற்கொண்ட போராட்டத்துக்கு கிடைத்த நியாயமான வெற்றியாகும் என்றார்.
வலை வீசத் தொடங்கிய மீனவர்கள்:
இதற்கிடையே, 17 நாள் தொடர் வேலை நிறுத்தத்திற்குப் பின்னப் மீண்டும் இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது தொழிலை தொடங்கினர்.
17 நாட்கள் நடந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் 20, 000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. துறை ரீதியாக ரூ. 24 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவணியில் ரூ.4.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீனவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதையடுத்து இன்று முதல் மீண்டும் கடலுக்குள் சென்றனர். இன்று காலை 746 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications