அரசுக்கு ஓட்டளிக்க சிபிஐ மிரட்டுகிறது-பிஎஸ்பி

ராகுல் காந்தியை பேச விடாமல் தடுத்த அவர்கள் கையில் பேப்பர்களை வைத்துக் கொணடு அவையில் கூச்சலிட்டனர்.
இதையடுத்து அவர்களை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பேச அனுமதித்தார். அவர்கள் பேசுகையில், மாயாவதிக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ, எங்களை காங்கிரஸ் அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என நெருக்கடி தந்து வருகிறது. இல்லாவிட்டால் மாயாவதி சிக்கலில் மாட்டுவார் என மிரட்டினர்.
ஆனால், இந்த நெருக்குதல் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சவில்லை என்றனர்.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு உள்துறை அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஆனால், இது குறித்து மக்களவை கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிஎஸ்பி எம்பிக்கள் கோரினர்.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எம்பிக்கள் வன்மையாக மறுத்து கூச்சலிட்டனர். இடையில் புகுந்து பாஜகவினரும் கூச்சலிட்டதால் அமளி நிலவியது.












Click it and Unblock the Notifications