நாட்டுக்கு மன்மோகன் சிங் துரோகம்: சிபிஎம்
டெல்லி: ஜார்ஜ் புஷ்ஷுக்காக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை மன்மோகன் சிங் அரசு தூக்கிப் போட்டு விட்டது. நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
லோக்சபாவில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழு துணைத் தலைவர் முகமது சலீம் பேசியதாவது:
நம்முன் உள்ள பிரச்சனை என்னவெனில் அரசு மீது இந்த அவை நம்பிக்கை வைத்திருக்கிறதா அல்லது அவர் செய்திட்ட துரோகத்திற்கு ஆதரவினைப் பெற்றிருக்கிறதா என்பதாகும்.
பிரதமருக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டு மல்ல, இவ்வாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைவ தற்கும் அதற்கு இடது சாரிக் கட்சிகள் ஆதரவு அளிப்பதற்கும் உதவிடும் வகையில் ஐமுகூ-இடதுசாரிக் கட்சிகளின் குழுவை ஏற்படுத்திய ஹர்கிஷன்சிங் சுர்ஜித் மற்றும் ஜோதிபாசு போன்ற ஜாம்பவான்களுக்கும் துரோகம் செய்துவிட்டது அரசு.
அத்தகைய துரோகத்தை இந்த அவை ஏற்றுக்கொள்ளப்போகிறதா என்பதே இப்போதைய பிரச்சனையாகும். இடதுசாரிக் கட்சிகள், ஐமுகூ அரசுக்கு ஆதரவு அளித்திட ஆறு அடிப்படை கொள்கைகளை முன்வைத்தன.
முதலாவதாக, நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கிடையேயும் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்த்திட வேண்டும், மதவெறி மற்றும் மதஅடிப்படைவாத சக்திகளிடமிருந்து மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
இரண்டாவதாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றுக்கு 7-ல் இருந்து 8 சதவீதமாக வளர்ந்திட வேண்டும். அதன் விளைவாக வேலைவாய்ப்புகள் அதிகரித்திட வேண்டும்.
மூன்றாவதாக, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாக வேண்டும்.
நான்காவதாக, பெண்கள் அரசியல் ரீதியாகவும், கல்விரீதியாகவும். பொருளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் முழுமையாக அதிகாரமளிக்கப்பட வேண்டும்.
ஐந்தாவதாக, தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர், மதச் சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முழுச் சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.
ஆறாவதாக, சமூகத்தின் உற்பத்திச் சக்திகள் மற்றும் வர்த்தகர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு ஊழியர்களின் முன்னேற்றத்திற்கும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
இவற்றின் அடிப்படையில் ஒரு குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த அரசு அமைந்தது. இடதுசாரிக் கட்சிகள் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் பிரதமர், இதனைச் செயல்படுத்தாமல் 'பொது அல்லாத" செயல் திட்டத்தை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார்.
இந்த அரசாங்கமானது கடந்த நான்கு ஆண்டு காலத்திற்கும் மேலாக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆட்சியிலிருந்தது. ஆனால் பிரதமர், நம் அனைவரையும் 'அதிகபட்ச" திட்டத்தை நோக்கி இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்.
இதற்கு நாங்கள் கட்டுப்பட முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்குக் கட்டுப்படாது. இடதுசாரிக் கட்சிகள் இதற்குக் கட்டுப்படாது. இந்த அவை இதற்குக் கட்டுப்படாது, நாடு இதற்குக் கட்டுப்படாது.
ஐமுகூ அரசாங்கத்திற்கு குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தின் கீழ் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. ஆயினும் அதனை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அரசாங்கம் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதுலேயே குறியாக இருந்தது, இதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அரசாங்கத்தின் சார்பில், ஓர் உறுதிமொழி அளிக்கப்பட்டது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அரசு சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும். ஆனால் பேச்சுவார்த்தையின் வெளிப்பாடுகள் மீண்டும் ஐமுகூ-இடதுசாரிக் கட்சிகளின் குழுவின் முன் பரிசீலனைக்காக வைக்கப்பட்டு, அதன் வெளிப்பாடுகளின் மீது முடிவுகள் இறுதிப்படுத்தப்படும் என்று அரசுத்தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.
ஆனால், இன்றுவரை பேச்சுவார்த்தையின் வெளிப்பாடுகள், அதாவது சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தையின் வெளிப்பாடுகள் ஐமுகூ-இடதுசாரிக் கட்சிகளின் குழுவின் முன் வெளிப்படுத்தப்படவே இல்லை. இவ்வாறு அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது.
சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் செய்துகொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தையின் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கப்படாதாம். அது ரகசிய ஆவணம் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாம் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நமக்கே அவை என்ன என்று தெரிவிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், அவ்வாறு தெரிந்து விட்டால் ஒப்பந்தமானது அதிர்ச்சி அலைகளை நமக்குள் ஏற்படுத்திவிடும் என்பதால், அதிகாரிகள் அதனை வெளிப்படுத்த அஞ்சியுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றுவதன் மூலம் இதனைத் தொடர்ந்து மேலும் பல தவறான ஒப்பந்தங்களை அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். எனவே இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றார் சலீம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications