அதிமுக எம்எல்ஏவுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க தடை
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ வி.பி. கலைராஜனுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை வழங்குமாறு சென்னை காவல்துறை ஆணையருக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வி.பி. கலைராஜன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிவால்வர் வைத்துக்கொள்ள உரிமம் கோரி மாநகர காவல்துறை ஆணையருக்கு விண்ணப்பித்தார். ஆனால் உரிமம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார் உரிமம் வழங்குமாறு மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு ஜூன் 3ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆணையர் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், வி.பி. கலைராஜன்,3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications