உலக வர்த்தக அமைப்புக்கு பறந்த கமல்நாத்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்குக் கிடைத்த அமோக வெற்றி தந்த மகிழ்ச்சியுடன் உலக வர்த்தக அமைப்பின் (WTO) கூட்டத்தில் பங்கேற்க ஜெனீவாவுக்குப் புறப்பட்டார் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத்.
இக்கூட்டத்தின் தோஹா சுற்றுப் பேச்சுகளில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன்பு சென்ற கமல்நாத், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக பாதியிலேயே தோஹாவிலிருந்து டெல்லிக்கு வந்திருந்தார். அவருக்குப் பதில் வர்த்தகத் துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை சில தினங்கள் பேச்சுகளில் கலந்து கொண்டார்.
இப்போது அரசு முழுமையாக ஐந்தாண்டுகள் நீடிக்கப் போகும் மகிழ்ச்சியுடன் உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்க ஜெனீவா புறப்பட்டுச் சென்றுள்ளார் கமல்நாத்.












Click it and Unblock the Notifications