லஞ்சம்-சபாநாயகரிடம் வீடியோ தரும் சிஎன்என்-ஐபிஎன்
டெல்லி: பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதை சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி ரகசியமாக வீடியோ எடுத்துள்ளது. இந்த வீடியோவை சபாநாயகரிடம் அந்த டிவி நிறுவனம் வழங்கவுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக பகன்சிங் குலாஸ்தி, மகாவீர் பகோரா, அசோக் அர்கல் ஆகிய 3 பாஜக எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை அந்த மூன்று எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் வந்து கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
அவர்கள் கூறுகையில்,
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டது. ஓட்டெடுப்பு முடிந்த பிறகு மீதிப் பணம் ரூ. 8 கோடி தரப்படும் என்று உறுதிமொழி தரப்பட்டது.
இந்த லஞ்சப் பணத்தை சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த ரியோதி ராமன்சிங் ஆகியோர் கொடுத்ததனர்.
இந்தப் பணத்தை கொடுக்க திங்கள்கிழமை எங்களை தொடர்பு கொண்டார்கள். லீ மெரிடியன் ஓட்டலுக்கு வாருங்கள், அங்கு இந்த பேரத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கு வைத்து எங்களிடம் எந்த பேரமும் நடக்கவில்லை.
பின்னர் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ரியோதி ராமன்சிங் பகல் 12.30 மணிக்கு பெரோசா சாலையில் உள்ள அசோக் அர்கல் வீட்டுக்கு வந்து எங்களை சந்தித்தார். அமர்சிங் வீட்டுக்கு வாருங்கள், அங்கு வைத்து பேசுவோம் என்றார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை காங்கிரஸ் எம்.பி.யும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது பட்டேல் இந்த பேரம் குறித்து தொலைபேசியில் எங்களுடன் பேசினார்.
அதன் பின்னர் நாங்கள் 3 பேரும் ரியோதி ராமன்சிங்குடன் அமர்சிங் வீட்டுக்குச் சென்றோம். அங்கு அமர்சிங் எங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் 3 கோடி ரூபாய் முன் பணமாக கொடுத்தார்.
ஆனால் நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்து விட்டோம். அந்தப் பணத்தை அசோக் அர்கல் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டோம்.
20 நிமிடம் கழித்து அசோக் அர்கல் வீட்டுக்கு ஒருவர் 2 பைகள் நிறைய ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து வந்து மேஜையில் வைத்தார். பைகளில் இருப்பது உண்மையான ரூபாய் நோட்டுகளா அல்லது கள்ள நோட்டுகளா திறந்து காட்டு என்று அந்த நபரிடம் கூறினேன். உடனே அவர் ஒரு கோடி ரூபாயை ரொக்கமாக எடுத்து வைத்தார்.
அப்போது அமர்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர் எங்களிடம் திரும்பி இந்தப் பணம் முன் பணம்தான் என்று கூறினார். இந்த முழு நாடகத்தையும் நிரூபிக்கும் வீடியோ டேப் (சிஎன்என்-ஐபிஎன் டேப்) ஆதாரம் உள்ளது என்றனர்.
ஒளிபரப்ப மாட்டோம்:
ஆனால், அதை சிஎன்என்-ஐபிஎன் ஒளிபரப்பவில்லை. மாறாக அந்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை அந்த தொலைக்காட்சியின் நிர்வாகியும் தலைமை ஆசிரியருமான ராஜ்தீப் சர்தேசாய் சபாநாயர் சோம்நாத் சட்டர்ஜியிடம் அளிக்கப் போவதாக அறிவித்துவிட்டார்.
இது குறித்து ராஜ்தீப் கூறுகையில், எங்கள் சேனலின் இரண்டு நிருபர்கள் இந்த காட்சிகளை ரகசியமாக படம் பிடித்தனர். எந்தவொரு அரசியல் யுத்தத்திலும் எங்கள் சேனல் ஈடுபடவில்லை. பொது நலன் கருதியே தன்னிச்சையாக அதை பதிவு செய்தோம்.
அதை விரைவில் சபாநாயகரிடம் கொடுப்போம். சபாநாயகர் அனுமதி இல்லாமல் அந்த காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மாட்டோம். அப்படி ஒளிபரப்பினால் அது உரிமை மீறல் பிரச்னையாகி விடும் என்றார்.
ஆனால், இந்த வீடியோவில் ஒரு நபர் வந்து தங்களிடம் பணத்தை எடுத்து வைத்தது தான் பதிவாகியுள்ளது என மூன்று எம்பிக்களும் கூறியுள்ளனர். இதனால் அந்த நபருக்கும் ரியோதி ராமன்-அமர்சிங்கு இடையே இந்த வீடியோ எப்படி முடிச்சு போடும் என்று தெரியவி்ல்லை.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications