ராமர் பாலம் இல்லையா? பாஜக கண்டனம்
Subscribe to Oneindia Tamil

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ராமர் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் பாலத்தை அம்பெய்தி உடைத்து விட்டார் என்று கம்ப ராமாயாணத்தில் கூறப்பட்டிருப்பதாக மத்திய அரசு வக்கீல் நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக லோக்சபா துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,அரசின் இந்த பதில் மனு லட்சக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகள் மீது விழுந்த மற்றொரு அடி.
இந்த பிரச்சனையில் மத்திய அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications