சபாநாயகர் பதவியில் நீடிப்பார் சோம்நாத்!
டெல்லி: கட்சி நடவடிக்கையால் சோம்நாத்திடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து சபாநாயகராக நீடிப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.
கட்சியின் ராஜினாமா உத்தரவை சட்டை செய்யாமல், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி. இதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சி தலைமை அவரை நீக்கினாலும், தொடர்ந்து சபாநாயகராக இருக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து சோம்நாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், கட்சி தலைமை கூறியபடி அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதனால் கட்சி அவர் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டது. கட்சியின் நடவடிக்கையினால் அவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. சபாநாயகர் பதவியை அவர் விடமாட்டார் என்று தெரிகிறது.
ஆகஸ்ட் மாதம் ஒன்று முதல் 10ம் தேதி வரை கோலாலம்பூரில் நடக்க உள்ள காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பின் 54வது கூட்டத்தில் சோம்நாத் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50 பிரதிநிதிகளை அவர் வழிநடத்தி செல்ல உள்ளார் என்று தெரிவித்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications