சென்னையில் மீண்டும் ஒரு மர்மக் கொலை-சைக்கோ பீதி அதிகரிப்பு
சென்னை: கடந்தசில நாட்களாக அமைதியாக இருந்து வந்த சென்னையில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் மீண்டும் சைக்கோ பீதி அதிகரித்துள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதிகளான வட பழனி, அசோக் நகர், மாம்பலம், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து மர்மக் கொலைகள் நடந்துவருகின்றன. இதுவரை 8 பேர் கொல்லப்பட்டனர். வாட்ச்மேன்களாக அதிகம் கொல்லப்பட்டிருப்பதால் இது ஏதோ ஒரு சைக்கோ மனிதரின் செயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலையாளி இதுவரை சிக்காததால் மக்கள் பெரும் கவலையுடனும், பீதியுடனும் உள்ளனர். இரவு ரோந்தை போலீஸார் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களும் கையில் கம்புகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த தீவிர கண்காணிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக புதுக் கொலை எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் விருகம்பாக்கம், சின்மயா நகரில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் பிணம் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், யார் கொன்றது என்பது தெரியவில்லை.
இந்தக் கொலையால் மீண்டும் சைக்கோ நபர் பீதி அதிகரித்துள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications