விலைக்கு வருகிறது சதாமின் கார்

185000 பவுண்ட் விலை கொண்ட இந்த மெரூன் கலர் ரோல்ஸ்ராய்ஸ், கிளைமட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டுள்ளது.
இங்கிலாந்தின் சர்சே நகரில் உள் கார் டீலரான ஆட்டோ காண்டிநென்டல் இதை வாங்கி இபே மூலம் விற்கவுள்ளது. இந்த கார் பாக்தாதில் இருந்து ஒரு மாதத்துக்குள் இங்கிலாந்து வந்து சேரவுள்ளதாம்.
இந்த காரில் இருந்த ஸ்டீரியோ சிஸ்டத்தை அமெரிக்கப் படை வீரர்கள் அகற்றிவிட்டதால், புதிய ஸ்டீரியோ பொருத்தப்படும் என ஆட்டோ காண்டிநென்டலின் உரிமையாளரான பிரவுன் தெரிவித்துள்ளார்.
இந்தக் காரை வாங்க இப்போதே பலரும் போட்டி போட ஆரம்பித்துவிட்டதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கலோனல் காரில் உள்ள நம்பர் பிளேட்டை தனது காரில் பொருத்த ஆர்வமாகி விலை பேசி வருவதாகவும் பிரவுன் கூறியுள்ளார்.
இந்தக் காரை கடந்த மாதம் இராக் அரசு ஏலத்தில் விட்டது. அதை நண்பர் ஒருவர் மூலம் வாங்கியுள்ளார் பிரவுன்.












Click it and Unblock the Notifications