இந்தியில் பதவியேற்பு-நேபாள துணை ஜனாதிபதிக்கு எதி்ர்ப்பு
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டூ: நேபாளத்தின் புதிய துணை ஜனாதிபதியாக பிரேமானந்த ஜா ஹிந்தியில் பதவியேற்றதற்கு அந் நாட்டில் கடும் எதி்ர்ப்பு கிளம்பியுள்ளது.
இதை எதிர்த்து அந் நாட்டு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட்களும் பிரேமானந்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய மொழியில் பதவிப் பிரமாணம ஏற்றுக் கொள்வது நாட்டின் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான பகதூர் மகாரா குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி நேபாள மொழியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க அதை இந்தியில் படித்தார் ஜா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications