பெங்களூரில் 7 இடங்களில் குண்டுவெடிப்பு-3 பேர் பலி?

ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா செக்போஸ்ட், மைசூர் ரோட்டில் உள்ள நாயந்தஹள்ளி, கோரமங்களா, ஆடுகோடி, கண்டோன்மென்ட் அருகே உள்ள லாங்போர்ட் டவுன், சாந்தி நகர் அருகே ரிச்மண்ட் டவுன், எம்.ஜி.ரோடு அருகே உள்ள விட்டல் மல்லையா ரோடு ஆகிய இடங்களில் இந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
முதல் குண்டு 1.20 மணிக்கு மடிவாளா செக்போஸ்ட் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் வெடித்தது. இதில் ஸ்ரீ ரவி என்ற பெண் பலியானார். அவருடன் நின்றிருந்த கணவர் ரவியும் இன்னொருவரும் காயமடைந்தனர்.
இதையடுத்து 1.25 மணிக்கு ஆடுகோடியின் சாக்கடைப் பகுதி அருகே இரண்டாவது குண்டு வெடித்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
1.45 மணிக்கு மைசூர் ரோட்டில் நாயந்தஹள்ளியில் மூன்றாவது குண்டு வெடித்தது.
நான்காவது குண்டு 2.10 மணிக்கு கோரமங்களாவில் வெடித்தது, ஐந்தாவது குண்டு 2.25 மணிக்கு விட்டல் மல்லையா சாலையிலும், 6வது குண்டு 2.35 மணிக்கு லாங்போர்ட் டவுனிலும் குண்டு வெடித்தது.
7வது குண்டு ரிச்மண்ட் டவுனிலும் வெடித்தது. சுமார் 1 மணி நேர இடைவெளியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.
இதில் 3 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், ஒரு பெண் பலியானது மட்டுமே இதுவரை உறுதியாகியுள்ளது.
வெடித்தவை அனைத்துமே குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைமர்களைக் கொண்டு இவை வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. 4 இடங்களில் வெடித்த குண்டுகளில் யாருமே காயமடையவில்லை எனவும் போலீசர் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடித்த இடங்கள் அனைத்துமே ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும்.
இந்த சம்பவத்தையடுத்து பெங்களூரின அனைத்து வர்த்தக மால்களும் மூடப்பட்டுவி்ட்டன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுவிட்டன. அதே போல திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.
ஐடி நிறுவனங்கள் மூடல்:
இந்த குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நகரின் பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான ஊழியர்கள் பாதியிலேயே பணியிலிருந்து வீடு திரும்பினர்.
கடும் போக்குவரத்து நெரிசல்:
மேலும் பள்ளிகளும் மூடப்பட்டதால் தெற்கு பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் சுற்றி வளைத்து சீல் வைத்துள்ளனர். மேலும் முக்கியப் பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
செல்போன்கள் ஜாம்:
இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து செல்போன்கள் உள்ளிட்ட தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டதால் தொலைபேசி நிறுவன சர்வர்கள் ஜாம் ஆகின.
இதைத் தவிர புரளி பரவுவதைத் தடுக்க போலீசாரே சிறிது நேரத்துக்கு தொலைபேசி சேவைகளுக்கு தடை விதித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications