பெங்களூர் குண்டுவெடிப்பு- சந்தேக வாலிபர் 'ஸ்கெட்ச்' வெளியீடு
பெங்களூர்: பெங்களூரில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை வைத்தது சிவப்பு நிற டி-சர்ட் அணிந்த சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் என நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி கூறினார்.
அவரைப் பார்த்தவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில், கம்ப்யூட்டர் உதவியோடு வரையப்பட்ட அந்த வாலிபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கோரமங்களா போரம் மால் அருகே குண்டு செயலிழக்கச் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இன்று கண்டுபிடிக்கப்பட்ட குண்டு ஒரு பூத் தொட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதை வைத்தது தொடர்பாக சிவப்பு நிற டி-சர்ட் அணிந்த சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
இன்றைக்குள் துப்பு துலங்கும்-முதல்வர்:
இதற்கிடையே இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பதை இன்று மாலைக்குள் போலீஸார் கண்டுபிடிப்பார்கள் என முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று மாலைக்குள் இந்த வழக்கில் முக்கிய துப்பு துலங்கும். சதிச் செயலுக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு விடும்.
மத்திய அரசிலிருந்து வரவுள்ள உயர் மட்டக்குழு எந்த நேரத்திலும் பெங்களூர் வந்து சேரலாம் என்றார்.
உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா கூறுகையில், அனைத்துக் கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் சதி இதில் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றார்.
இதற்கிடையே, இந்த செயலுக்குக் காரணமானவர்கள் மிகவும் திறமையான, முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்கக்கூடும் என டிஜிபி ஸ்ரீகுமார் கூறியுள்ளார். இந்த நிலையில், சதிச் செயல் குறித்த முக்கிய தகவல்களை தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications