அகமதாபாத்திலும் 16 இடங்களில் குண்டுவெடிப்பு - 18 பேர் பலி, 100 பேர் படு காயம்

பெங்களூரில் நேற்று முன்தினம் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இன்றும் அங்கு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜவஹர் செளக், சக்லா, சரங்பூர், அம்ரல்வாடி, கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர், மணி நகர், பாபு நகர், தக்கர் நகர், நரோடா, சர்கேஜ் உள்பட 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சைக்கிள்கள்- டிபன் பாக்ஸ்களில்:
மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.
வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்புகள் நடந்த இடங்கள் பெரும்பாலானவை மார்க்கெட் பகுதிகள் ஆகும்.
இந்த குண்டுவெடிப்புகளில் 100 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மணி நகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. சைக்கிளில் வெடிகுண்டுடன் வந்த நபர் பஸ் மீது மோதி, குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிகிறது.
இந்த குண்டுவெடிப்பில் பஸ் பாதி எரிந்து போய் விட்டது. அதேபோல பாபு நகரில், ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குண்டுகளைத் தேடி வேட்டை:
நகரில் மேலும் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து நகர் முழுவதும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் வெடிக்காத நிலையில் இருக்கும் குண்டுகளைத் தேடி வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதி விரைவு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:
குஜராத் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநிலங்களில்:
நேற்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த கர்நாடகத்திலும், இன்று நடந்துள்ள குஜராத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications