ரூ. 5,000 லஞ்சம்-அரசு இன்ஜினியர் கைது
தென்காசி: வீட்டு வசதி வாரியத்துக்காக செய்த பணிகள் குறித்த மதிப்பீட்டைத் தர காண்டிராக்டரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய இஞ்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பெருமாள்புரம் பொன்னகரைச் சேர்ந்தவர் ராஜூ மகன் சங்கர பாண்டியன். இவர் தென்காசி ஹவுசிங் போர்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார்.
தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே 102 பிளாட் அமைக்கும் பணி உள்ளிட்ட சில பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியை பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கண்டரக்டர் எடுத்து நடத்தி வருகிறார். நடந்து முடிந்த பணிகள் குறித்து அளவீடு செய்து தொகை நிர்ணயம் செய்ய இன்ஜினியர் சங்கரபாண்டியன் சென்றுள்ளார்.
அப்போது ராஜனிடம் தனக்கு 10 ஆயிரம் தந்தால்தான் பணி குறித்து அளவீடு செய்து தொகை பெறுவதற்கு பரிந்துரை செய்ய முடி்யும் என கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜன் இதுகுறித்து நெல்லை லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஓழிப்பு ஏடிஎஸ்பி பெருமாள்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் எஸ்கால் ராஜி, ஏட்டுகள் சங்கரன், நயினார், சுவாமிநாதன், முருகன், நாகராஜன் ஆகியோர் தென்காசி ஹவுசிங் போர்டு காலனி அருகே மறைந்திருந்தனர்.
லஞ்ச ஓழிப்பு போலீசார் கெமிக்கல் தடவி கொடுத்த ரூ.5 ஆயிரத்தை ராஜன் சங்கர சுப்பிரமணியனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications