திருச்செந்தூரில் புலிகள் ஊடுருவல்?-க்யூ பிராஞ்ச் விசாரணை
திருச்செந்தூர்: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள ஒருவர் கோயிலுக்குள் விட்டுப்போன கேமரா பையால் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவேளை நகருக்குள் புலிகள் ஊடுருவிட்டார்களோ என்ற சந்தேகத்தில் க்யூ பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
திருச்செந்தூரில் தூண்டி விநாயகர் கோவில் உள்ளது. கோயிலுக்குள் கேமரா பேக் ஒன்று அனாதையாக கிடந்தது. இதை எடுத்த கூலித் தொழிலாளி அய்யாதுரை, கோயில் அலுவலகத்தில் ஓப்படைத்தார். உடனே பயந்துபோன நிர்வாகிகள் போலீசில் ஓப்படைக்குமாறு கூறி விட்டனர்.
போலீசுக்கு போக பயந்த அந்த தொழிலாளி அவர் எடுத்த இடத்திலேயே பேக்கை வைத்து விட்டார். இதுகுறித்து திருச்செந்தூர் விஏஓ பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. அதற்குள் கோயில் பகுதியில் பரபரப்பாகிவிட்டது.
அவர் பேக்கை எடுத்து திருச்செந்தூர் போலீசில் ஓப்படைத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பேக்கை சோதனை போட்டனர்.
அதில் பயன்படுத்தப்படாத 4 வீடியோ கேசட், பயன்படுத்தப்பட்ட ஒரு கேசட், படம் எடுக்கப்பட்ட 2 பிலிம் ரோல், கேமராவின் வெளிப்பையில் ரூ.25 ஆயிரம் இருந்தன. இது தவிர இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக வசூலிக்கும் நன்கொடை ரசீது புத்தகமும் இருந்தன.
புலிகளுக்காக நிதி வசூல்?:
அந்த ரசீதில் நலிவுற்றோர் நலன் வாழ்வுத்திட்டம் என்ற தலைப்பில் இலங்கையில் போரினால் நேரிடையாக பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை வளமாக்க தங்களின் மனம் உவந்த பங்களிப்பை நல்குங்கள். முகவரி-சமுதாய முன்னேற்ற நிலையம், நலிவுற்றோர் நலவாழ்வு திட்டம், தலைமை செயலகம், கனகபுரம், கிளிநொச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவல் கிடைத்ததும் கியூ பிராஞ்ச் போலீசார் திருச்செந்தூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதி வசூலிக்க திருச்செந்தூர் வந்த விடுதலைபுலிகளோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ இந்த கேமரா பேக்கை தவற விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பேக்கை கொண்டு வந்தது விடுதலை புலிகளா அல்லது அந்த இயக்கத்தை ஆதரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications