பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்: கனிமொழி
சென்னை: பள்ளிகளில் தாய்மொழி தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் மழலையர் தொடக்க பள்ளி சங்கங்களின் 35-வது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி பேசியதாவது: ஆசிரியர்களின் ஒவ்வொரு வார்த்தையும் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. முன்பெல்லாம் ஆசிரியர்களின் பேச்சுக்கு மாணவர்களிடையே மறுப்பு இருக்காது.
இப்போது, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது.
எனவே ஆசிரியர்கள் உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கி கொள்ள வேண்டும். மாணவர்களின் மன நிலையை அறிந்து அவர்களை அணுகும் முறையையும் அறிந்து கொள்ள வேண்டும்.
கல்வி வளர்ச்சியில் மெட்ரிக் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் முந்தி செல்கின்றன. சில மெட்ரிக் பள்ளிகள் நன்கொடையும், குழந்தைகளின் பெற்றோர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். தவிர பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேச தடை போடுவதாகவும் கூறப்படுகிறது. இது மிகவும் வேதனையான விஷயம்.
மொழிகளை கற்றுக் கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் தாய்மொழி வழியில் கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் எளிதில் புரிந்துக்கொள்ள முடியும் எனவே தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று பேசினார் கனிமொழி.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications