அகமதாபாத் நகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு
அகமதாபாத்: தொடர் குண்டுவெடிப்பு நடந்த அமகதாபாத் நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ராணுவ கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அகமதாபாத் நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் ஜா கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. நகரின் பதட்டமான பகுதிகளில் அவர்கள் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் படிப்படியாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்குகளின் போதுகலவரம் மூளாமல் தடுக்க உரிய நடவடிக்ைககள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.
வதோதராவில் உஷார் நிலை:
இதற்கிடையே, வதோதார நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஷ்தானா கூறியுள்ளார்.
நகரின் முக்கியப் பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நகரின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications