அகமதாபாத் குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் பொறுப்பேற்பு
இதுதொடர்பாக குண்டு வெடிப்புக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக அது ஒரு இமெயிலை அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளது.
அந்த இமெயில், ஜிஹாத்தின் உதயம், குஜராத்துக்கு பழிக்குப் பழி என்று தலைப்பிடப்பட்டிருந்தது. குஜராத் கலவர படமும் அதில் இடம் பெற்றுள்ளது.
அந்த இ மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது...
இன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள். மரணத்தின் பயத்தை உணர காத்திருங்கள்.
ஜெய்ப்பூர் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக திரும்பி வருகிறோம். முஜாஹிதீன்களையும், இஸ்லாமின் பிதாயின்களையும் சந்திக்க காத்திருங்கள். முடிந்தால் தடுத்துப் பாருங்கள். ஜிஹாத்தின் பயங்கரத்தை உங்களுக்கு உணரவிருக்க வருகிறோம்.
இஸ்லாமியர்களை அவலப்படுத்திய மோடியின் இடத்திற்கே வருகிறோம்.
மத்திய பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஜிஹாத்தின் பயங்கரத்தை விரைவில் உணருவீர்கள்.
ஹைதராபாத் போலீஸார் கைது செய்து வைத்துள்ள இஸ்லாமிய ஜிஹாதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
எங்களது கொலைப் பட்டியலில் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல், முகேஷ் அம்பானி ஆகியோரும் உள்ளனர்.
நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரையும் தாக்குவோம்.
மேலும் ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளியிடுவதை டைம்ஸ் ஆப் இந்தியா, டைம்ஸ் நெள தொலைக்காட்சி ஆகியவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள் அப்பாவிகளான சிமி தொண்டர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த இ மெயிலில் கூறப்பட்டிருந்தது.
மெயிலின் கீழே குரு அல் ஹிந்தி, அல் அர்பி என கையெழுத்திடப்பட்டுள்ளது.
முஸ்லீம் நடிகர்களுக்கு எச்சரிக்கை:
இதற்கிடையே இந்திப் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு முஸ்லீம் நடிகர், நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்தும் சில பத்திரிக்கைகளுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியதும் இதே அமைப்பினர் தானா என்ற விசாரணை நடக்கிறது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்













Click it and Unblock the Notifications