காமராஜர் பாதையில் கருணாநிதி-ஆற்காடு வீராசாமி
கடையநல்லூர்: பெருந்தலைவர் காமராஜர் அமைத்த பாதையில் நடைபோட்டு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் முதல்வர் கருணாநிதி, என்று கூறியுள்ளார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
கடையநல்லூரில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார். மத்திய அமைச்சர் ஜீ.கே வாசன் பேசியதாவது:
இந்த விழாவினை பொறுத்தவரை பார்லியில் நம்பிக்கை ஓட்டடெடுப்பின் மீது காங் கூட்டணி அரசு வெற்றி பெற்றதற்கான விழாவாகதான் கருத முடிகிறது. இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது அடுத்த முறையும் இதே கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
காமராஜரின் தொலைநோக்கு பார்வையால் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி வசதி, மதிய உணவு வசதி, இலவச சீருடை திட்டம் போன்றவை அனைத்தும் கிடைக்க பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை கல்வி தரத்தினை உயர்த்திட முதல்வர் கருணாநிதி பல கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளார். காமராஜர் எண்ணிய கல்வி சேவையை முதல்வர் கருணாநிதி சிறப்பாக செய்து வருகிறார் என்றார்.
காமராஜர் பாதையில்...
விழாவில் பேசிய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ்ந்திட காமராஜர் காட்டிய கல்வி சேவை பாராட்டுக்குரியது. தமிழகத்தை தலைநிமிரச் செய்த பெருமை காமராஜருக்குதான் உண்டு. அவர் அமைத்து வைத்த பாதையில் இப்போது முதல்வர் கருணாநிதி வெற்றிகரமாக பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது 300 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடாக உள்ளது. இருப்பினும் இந்த்த் தட்டுபாட்டை குறைத்திடும் வகையில் 100 மெகா வாட் மின்சாரம் மகாராஷ்டிராவில் இருந்து வாங்கிட பிரதமரும், சோனியா காந்தியும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அணுசக்தி திட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்படாததற்கு சீனாவின் தூண்டுதல் தான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் கம்னியூட் கட்சியினர் எதிர்க்கிறார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது என்றார் அவர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications