தமிழக அமைச்சர்கள் பதவி மோகம்-சிபிஎம்
தஞ்சாவூர்: பிரதமர்கள் மாறினாலும் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அமைச்சர்கள்
இடம் பெறுகிறார்கள். பதவி சுகம் படைத்த அவர்களால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று தாக்கி பேசியுள்ளார் மார்க்சிஸ்ட் எம்பி சீதாராம் யெச்சூரி.
இந்திய மாணவர் சங்க 21வது மாநில மாநாடு தஞ்சாவூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநில தலைவர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் அகில இந்திய தலைவரும் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, பணத்தை அள்ளி வீசி வெற்றி வெற்றது. அப்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இடதுசாரிகள் எங்களை கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி இருக்க முடியாது என்றார். ஆனால் அமெரிக்காவிடம் நாட்டை கொத்தடிமையாக்கி விட்டனர்.
பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி மத்தியில் ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளின் பொருளாதார கொள்கை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்றன. அதைமாற்றிடவே, பதவி சுகம் இல்லாதவர்களை கொண்டு 3வது அணியை ஏற்படுத்த இடதுசாரிகள் பாடுபட்டு வருகிறது.
நாட்டை வளமானதாகவும் வலிமையானதாகவும் மாற்ற இந்த அணி முயற்சித்து வருகிறது. இடதுசாரிகளின் இந்த முயற்சிக்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடந்த 1996 முதல் 2008 வரை மத்தியில் தேவெ கௌடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் என்று பல பிரதமர்கள் ஆட்சி செய்தனர். பிரதமர்களும் ஆட்சியும் மாறினாலும், தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அமைச்சர்கள் அதில் இடம்பெற்றிருப்பதை கவனித்திருப்பீர்கள். பதவி சுகம் படைத்த அவர்களால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும்? என்றார்.












Click it and Unblock the Notifications