அதிமுக எம்எல்ஏ 'அர்ச்சனை'-பெண் எஸ்ஐ அழுகை
கோவை: கோவையில் பெண் எஸ்ஐ ஒருவரை அதிமுக எம்எல்ஏ திட்டிப் பேசியதால் அந்த எஸ்.ஐ. கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் நகராட்சி திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் மக்கள் குறை கேட்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் முகாம் துவங்கப்படாதாதல் மக்கள் மனு கொடுக்க முன்டியடித்து நின்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மாவட்ட அதிமுக தரப்பில் திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் அதிமுகவினரை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டம் நடத்திய மக்களை எம்எல்ஏக்கள் வேலுசாமி, சின்னசாமி ஆகியோர் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.
இது தெரியாமல் அங்கு வந்த பெண் எஸ்ஐ மஞ்சு வரலட்சுமி பொது மக்களிடம் விசாரணை நடத்தினார். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ. வேலுச்சாமி, யாரும் எதிர்பாராத வகையில், கடும் சொற்களால் மஞ்சு வரலட்சுமியைத் திட்டத்தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுவரலட்சுமி கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சுவுடன் வந்த சக போலீஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications