வென்ச்சர் பண்ட்-அக்செல் நிறுவனத்துடன் இணைந்த எராஸ்மிக்
பெங்களூர்: இந்தியாவில் நிறுவனம் தொடங்க ஆரம்ப முதலீடு செய்யும் வென்ச்சர் கேபிடல், சீட் பண்ட் நிறுவனங்கள் மிகக் குறைவு.
இவ்வாறு முதலீடுகள் செய்யும் மிகச் சில நிறுவனங்களில் ஒன்றான எராஸ்மிக், அமெரிக்காவின் முன்னணி வென்சச்ர் பண்ட் முதலீட்டு நிறுவனமான அக்செல் பார்ட்னர்ஸ் நிறுவனத்துடன் இணைந்துவிட்டது.
இந்த புதிய நிறுவனத்துக்கு அக்செல் இன்டியா வென்ச்சர் பண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்திய முதலீடுகளில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறது.
இந்த நிதி அமைப்பை நிர்வகிக்கப் போவது அதன் பார்ட்னர்களான பிரசாந்த் பிரகாஷ், சுப்ரதா மித்ரா, மகேந்திர பாலச்சந்திரன் மற்றும் ககன் குமார்.
இந்த தகவல்களை உறுதி செய்த பிரசாந்த் பிரகாஷ் கூறுகையி்ல், ஆக்செல் இந்தியா வென்ச்சர் பண்ட்-2 நிறுவனம் 60 மில்லியன் டாலர் அளவுக்கு நிதியை திரட்டும். 2008ம் ஆண்டின் 3வது காலாண்டிலிருந்து செயல்படத் தொடங்கும் என்றார்.
அக்செலுடன் இணைந்ததன் மூலம் ஏராஸ்மிக் உலகின் மிக முக்கிய வென்ச்சர் பண்ட் நிறுவனமாக மாறியுள்ளது. இதன் மூலம் இது இன்னொரு மிகப் பெரிய வென்ச்சர் கேபிடல் நிறுவனமான சீகுயோயா கேபிடலுக்கு (Sequoia Capital) இணையான நிறுவனமாக உருப்பெற்றுள்ளது.
எராஸ்மிக்கில் கூகுள் இண்டர்நெட் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. எராஸ்மிக் நிறுவனம் 1 முதல் 5 லட்சம் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள் மற்றும் ஆப்லைன் நிறுவனங்களில் இந்த முதலீடுகள் சமமான அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் இதன் துணை நிறுவனமான காட்டிஸோன்.காம் இளம் வயதினரை சுண்டியிழுக்கும் தளமாக உள்ளது. இதன் ஹாலிடேஐகூ.காம் இணையத் தளம் இந்தியாவின் பயணத் தளங்களை மதிப்பீடு செய்வதில் முன்னணியில் உள்ளது.
இந் நிலையில் ஆக்செல் இந்தியா வென்ச்சர் பண்ட் நிறுவனம் இன்டர்நெட், மொபைல், மீடியா, உயிரியல் ஆய்வு, தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவுள்ளது.
புதிய நிறுவனங்களை உருவாக்க நிதியுதவி செய்யும் அமைப்பான உருவான எராஸ்மிக் இன்று மிகப் பெரிய வென்ச்சர் காபிடலாக உருவானாலும், தொடர்ந்து புதிய நிறுவனங்களுக்கான நிதியுதவியையும் (சீட் பண்ட்) வழங்க முடிவு செய்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications