அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள், பிரசாரங்கள்: ராஜா
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக அரசியல் சந்தர்ப்பவாதத்தில் ஈடுபட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஆட்சியில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டது. அதை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இடதுசாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டங்களும், பிரசார இயக்கங்களும் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இடதுசாரிகளும், அதனுடன் அணி சேர்ந்து 10 கட்சிகளும் இணைந்து, தேசிய அளவில் பல்வேறு போராட்டங்களையும், தொடர்ச்சியான பிரசார இயக்கங்களையும் மேற்கொள்ளவுள்ளன.
இந்த போராட்டங்களின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும், அரசின் தோல்வியையும் மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
வாக்குகளை பெறுவற்காக பண பலத்தை பயன்படுத்தவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தயங்காது என்பதையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிரூபித்துள்ளது.
இடதுசாரிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம், பகுஜன்சமாஜ் கட்சி ஆகியவை அணி சேர்ந்துள்ளதைப் போல வரும் நாட்களில் மேலும் பல அரசியல் மாற்றங்கள் அரங்கேறும். காங்கிரஸ், அதை விட்டால் பாஜக என்கிற இருமுனை அரசியல் சூழலை எங்களது அணி மாற்றும் என்றார் அவர்.
-
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications