தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தொடரும்-சிபிஎம்
சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் தொடரும். முறிவு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை விளக்கிக் கொண்டன. மத்திய அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றிருப்பதால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசை கடந்த 2 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் ஆதரித்து வருகின்றன. திமுக அரசு மக்களுக்கு ஆற்றி வரும் நல்ல காரியங்களை நாங்கள் பாராட்டி வருகிறோம். அதேசமயம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
அடுத்த தேர்தலின்போதுதான் கூட்டணி குறித்து பேசுவோம். சீட் பங்கீட்டின் அடிப்படையில் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.
திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம். கூட்டணி முறிவு என்ற பேச்சு தற்போது எழவில்லை என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 எம்எல்ஏக்களும், 2 எம்பிக்களும் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 எம்எல்ஏக்களும் 2 எம்பிக்களும் உள்ளனர்.
இந்த 15 எம்எல்ஏக்களும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றாலும் காங்கிரசில் உள்ள 35 எம்எல்ஏக்கள் அரசை ஆதரிப்பதால், ஆளுங்கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
தற்போதைய நிலையில் திமுக உடனான கூட்டணி தொடரும் என்று அவர் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications