சிண்டு முடித்து, சண்டை மூட்டும் ராமதாஸ்- கருணாநிதி
சென்னை: சிண்டு முடித்து, சண்டையை மூட்டி ஆட்சியை கவிழ்க்க ராமதாஸ் முயற்சிக்கிறார் என முதல்வர் கருணாநிதி மறைமுகமாகக் கூறினார்.
அறிஞர் பேரவை சார்பாக 'கலைஞர் படைப்புலகம்' என்ற பன்னாட்டுக் கருத்தரங்க துவக்க விழா, சென்னையில் நடந்தது.
நிதியமைச்சர் அன்பழகன் தலைமை வகித்தார். மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராசா தொடங்கி வைத்தார்.
அதில் கருணாநிதி பேசுகையி்ல்,
கவிதை, கட்டுரை படைப்பதில் சிறந்தவன் என என்னை இங்கு பாராட்டினர். பாராட்டு கிடைத்ததால், நான் பெரிய சாதனை படைத்து விட்டேன் என எண்ண மாட்டேன். அடக்கம்தான், மேலும், மேலும் பல சாதனைகள் புரிய தூண்டுகோலாக அமையும் என்பதை அறிவேன்.
எனது இந்த சிறப்புக்கு பகுத்தறிவுப் பகலவன் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் காட்டிய வழிதான் காரணம். எங்கோ தஞ்சை மாவட்டம், திருக்குவளையில் பிறந்த நான் இவ்வளவு சிறப்பு பெற்றாலும், இவன் இவ்வளவு புகழ் பெற்றானே என தமிழகத்தில் பலருக்கும் ஆதங்கம் இருக்கிறது.
ஆதி திராவிட வகுப்பில் பிறந்து, மத்திய அமைச்சராக புகழ் பெற்ற ராசாவின் தலையை வாங்க வேண்டும் என சிலர் பேசுகின்றனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், நம் மீது பாய்கின்றனர்.
சிண்டு முடித்து, சண்டை மூட்டி ஆட்சியை கவிழ்க்கத்தான் செயல்படுகிறார் (ராமதாஸ்?). ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதற்காக இதை நான் பேசவில்லை. அண்ணாவின் இரும்பு இதயத்தைப் பெற்ற நான், இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன்.
கவிதை, கட்டுரை எழுதியதால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எடுக்கும் பல திட்டங்களில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சி என்றார் கருணாநிதி.
விழாவில் முதல்வரின் பேத்தி கயல்விழியும் பேசினார்.
ஸ்டாலினுக்கு பாராட்டு:
இந் நிலையில் தமிழகத்தின் 385 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு ரூ.16.63 கோடி செலவில் டாடா ஸ்பேசியோ கோல்ட் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு திடலில் இன்று நடந்தது.
அதில் பேசிய கருணாநிதி,
ஊராட்சி ஒன்றியங் களுக்கு ஏற்கனவே ஜீப்பு கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் உண்டு. அது ஒன்றியங்களுக்குப் பொதுவாக வழங்கப்பட்டவை. இப்பொழுது வழங்கப்படுகின்ற வாகனங்கள் ஒன்றியக் குழுக்களின் தலைவர்களுக்கு தனியாக வழங்கப்படுகிற வாகனங்கள்.
இந்த ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி மன்றங்கள் இவைகளின் ஆளுகை ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பில், எவ்வளவு அருமையாக நடைபெறுகிறது என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.
இந்தத் துறையை அவர் பரிபாலித்து இந்தத் துறையின் மூலமாக பல நடவடிக்கைகள், நாம் எதிர்பாராத நடவடிக்கைகள், நாம் எண்ணிப்பாராத நடவடிக்கைகள் சிறப்புற நடைபெறும்போது எனக்கே கூட, முதலமைச்சர் பொறுப்பிலேயிருந்து இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கலாம் போலிருக்கிறதே என்று தோன்றுகிறது.
ஏனென்றால் அவ்வளவு புகழையும், கீர்த்தியையும் இந்தத் துறையின் மூலமாக ஸ்டாலினும் இந்தத் துறையிலே பணியாற்றுகின்ற செயலாளர்களும், அதிகாரிகளும் பெற்றிருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் பூரிப்படைகின்றேன் என்றார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications