திமுகவை திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்-ராமதாஸ்
சென்னை: திமுகவுடன் கூட்டணி சேர நூற்றுக்கு நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை. அவர்களாக கூப்பிட்டாலும் திரும்பி பார்க்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாமகவின் 20வது ஆண்டுவிழா பொதுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
அரசு ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்கிறது. தரமணியில் டாடா நிறுவனத்துக்கு 26 ஏக்கர் நிலம் ஏக்கர் நிலம் கொடுக்கிறார்கள். கேட்டால் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குத்தான் என்கிறார்கள். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 50 லட்சம் பேரில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. இதையெல்லாம் கேட்டால், கோபமடைந்து பாமக குழிப்பறிக்கிறது என்கிறார்கள். நேற்று கூட மரம் நடத்தான் குழி பறித்தோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஒரே மாதத்தில் சென்னையில் மட்டும் 28 கொலைகள் நடந்துள்ளன. இங்கு சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. காமராஜர் எல்லாரையும் படிங்க என்றார். இந்த அரசு எல்லாரையும் குடிங்க என்கிறது.
சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் ரூ.15 உயர்நதுள்ளது. ஏழை மக்கள் ஒரு கழிப்பறை கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர். அரசுடையாக்க வேண்டு்ம் என்கிறார்கள். ஆனால் ஆக்கவில்லை. சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வருகிறோம்.
எங்களை வன்முறை கட்சி என்கிறார்கள். எங்கள் கட்சியில் யாரும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் நாங்களே அரசிடம் காட்டிக் கொடுத்துவிடுவோம். ஏனென்றால் அது நம் சொத்து.
ஐந்து முறை ஆட்சிக்கு இருந்து என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்தார் என்பதை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா உயர்கல்வி தனியாரிடம் போய்விட்டது. கச்சத்தீவு மீட்காமல் போனதற்கு திமுகதான் காரணம்.
மக்களின் சாபம் என்றால் அது ஆற்காடு வீராசாமிக்குத்தான். அது அவருக்கு கேட்காது. இனி திமுகவுடன் உறவு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் கிடையாது. அவர்களாக அழைத்தாலும் சுயமரியாதை உள்ள நாங்கள் திரும்பி கூட பார்க்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications