குண்டுவெடிப்பு: அமெரிக்க குஜராத்திகள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
ராஜ்கோட்: அகமதாபாத் குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா வாழ் குஜராத்திகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஜனி, அமெரிக்க குஜராத் பவுன்டேஷன் தலைவர் ஹிருபாய் படேல், வடஅமெரிக்க குஜராத்தி சமாஜ் தலைவர் நரேஷ் பாதியாத்ரா ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அமெரிக்கா வாழ் குஜராத்தி சமூகத்தினர் கடுமையாக கண்டிக்கின்றனர்.
குஜராத் மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அமைதி காத்து, குஜராத்திகளின் ஒற்றுமையையும், வளர்ச்சியை நோக்கிய தங்களது பயணத்தின் உறுதியையும் வெளிக் காட்ட வேண்டும் என்று கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications