டாக்டர் அலட்சியத்தால் மாணவர் மரணம் சாவு
திருத்துறைப்பூண்டி: நெஞ்சுவலியால் துடித்த மாணவர் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால்தான் அவர் இறந்ததாக கூறி சக மாணவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கற்கநாதர்குளத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (21). இவர் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.ஸி. விலங்கியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 25ஆம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அன்று இரவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மாணவர் கோபிநாத் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் டாக்டர்களின் அலட்சியத்தால்தான் கோபிநாத் இறந்தாக கூறுகின்றனர். இதையடுத்து மாணவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். காலை முதல் மாலை வரை இந்த முற்றுக்கைக் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருவாரூர் கோட்டாட்சியர் மாணவர்களை சந்தித்து சமரசம் செய்தார். அப்போது பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர் ஆனந்தி மற்றும் ஊழியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டாக்டரின் அலட்சியத்தால் இறந்துபோன கோபிநாத் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிகைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார். அதையடுத்து மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications