தமிழக அரசின் புதிய ஐடி கொள்கை-30 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கு இலக்கு

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைசச்ர் ராஜா முன்னிலையில் இந்த புதிய ஐடி கொள்கையை முதல்வர் வெளியிட்டார்.
அதில், புதிதாக 80 ஆயிரம் நேரடி வேலை வாய்ப்புகள் மற்றும் 20.2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளை 2011ம் ஆண்டுக்குள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் முதல்வர் பேசுகையில், அறிவு சார் சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக தமிழகம் மாறும்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய மற்றும் விரிவாக்க பணிகளுக்கு ரூ.250 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கட்டமைப்பு தொகுப்புதவி அளிக்கவும், 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களை உருவாக்குவோருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுதவிர இந்த நிறுவனங்களில் ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கே.என். நேரு, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, டிசிஎஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம், எச்சிஎல் நிறுவன தலைமை செயலதிகாரி ஷிவ் நாடார், போலாரிஸ் நிறுவன தலைவர் அருண் ஜெயின், நோக்கியா இந்தியா இயக்குநர் சச்சின் சக்சேனா மற்றும் காக்னிசன்ட், விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ்,
இன்போசிஸ், டெல், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிஐஐ தலைவர் மாணிக்கம் ராமசாமி, நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல், ஐஐடி இயக்குநர் எம்.எஸ். ஆனந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications