மன்மோகன் பதவியில் நீடிக்க அருகதை இல்லை-பாஜக
ஹைதராபாத்: பதவியில் நீடிப்பதற்காக வாக்குகளை விலைக்கு வாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஹைதராபாத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய பொதுச் செயலாளருமான விஜய் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்சியில் நீடிப்பதற்காக எம்.பிக்களை விலை கொடுத்து வாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இனியும் ஆட்சிப் பொறுப்பில் நீடிக்கக் கூடாது. அந்த அருகதையை அது இழந்து விட்டது. இது சட்டவிரோத அரசு.
மக்களுக்குப் பாராளுமன்றம் மீது நம்பிக்கை போய் விட்டது. தாங்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் மீது நம்பிக்கை போய் விட்டது.
நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என்று மக்கள் கூறி வருகின்றனர். சோனியா காந்தியால் கட்டுப்படுத்தப்படும் பிரதமர் என்ற பெயரையும் மன்மோகன் சிங் வாங்கி விட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளால், மன்மோகன் சிங்கின் கெளரவமும், மரியாதையும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளன.
எம்.பிக்களுக்குக் கொடுக்கப்பட்ட பணம் ஆந்திர காங்கிரஸ் தலைவர்களால் கொடுக்கப்பட்டது என சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார் கோயல்.












Click it and Unblock the Notifications